-mdl.jpg)
சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இரண்டாவது முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது . இந்தப் போட்டி தொடரின் தோல்விக்கு பிறகு இந்திய அணி மற்றும் அதன் வீரர்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர் . அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமை மற்றும் வீரர்களின் பேட்டிங் பற்றி முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் வைத்து வருகின்றனர் .
மேலும் இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் இந்திய அணிக்கு எதிரான விமர்சனங்களும் கண்டனங்களும் அதிகரித்து வருகின்றன . நேற்று நடந்து முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான அஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது .
இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து ஆட்டம் பரபரப்பாகவே நடைபெற்றது . முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 393 ரண்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து டிக்ளர் செய்ய ஆஸ்திரேலியா 386 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது . இதனைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 280 ரன்கள் வெற்றிலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிய ஆஸ்திரேலியா நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 107 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது .