
Harshal Is Going To Be Our Death Bowler, Says RCB Captain Kohli (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று கோலாகலாமகத் தொடங்கியது. நேற்று தொடங்கிய ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது.
சீசனின் முதல் போட்டியே ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக கடைசி பந்துவரைச் சென்றது. பரபரப்பான இப்போட்டியின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இப்போட்டியில் பெங்களூரு அணியின் ஹர்சல் பட்டேல் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்து, ஆட்டநாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.