
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் பெங்களூர் அணி தோற்றிருந்தாலும் அந்த அணி சார்பாக விளையாடிய ஹர்ஷல் பட்டேல் ஐபிஎல் தொடரில் சாதனையுடன் வெளியேறியுள்ளார். அந்த சாதனை யாதெனில் நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இந்த தொடரில் மொத்தம் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக இருந்த சென்னை அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் ஒன்பது சீசன்களாக பந்துவீசி உள்ளார்.