ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி நடை போட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இந்த மாத இறுதியில் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும், அடுத்ததாக அக்டோபர் மாதம் தொடங்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க உள்ளது.
பாகிஸ்தான் போன்ற அணிகள் ஆசிய கோப்பை தொடருக்கான தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியே, டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியாகவும் இருக்க வாய்ப்புள்ளதால், இந்திய அணியின் தேர்வாளர்கள் அணி தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி, அறிவிக்கப்பட இரு தினங்களே இருந்தாலும், ஹர்சல் பட்டேல், விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற வீரர்களின் நிலை என்ன என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இதில் குறிப்பாக விண்டீஸ் அணியுடனான முதல் டி20 போட்டியின் போது காயமடைந்த ஹர்சல் படேல், நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிக்கு முன் காயத்தில் இருந்து குணமடைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.