
Has Been An Extremely Exciting And Emotional Journey: Rohit Sharma On 12 Years With Mumbai Indians (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த நிலையில் மும்பை அணியில் இணைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்தது என்னால் நம்ப முடியவில்லை என ரோஹித் சர்மா தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர் , "மும்பை அணியில் இனைந்து 12 ஆண்டுகள் ஆகியுள்ளது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது எனக்கு மிகவும் உற்சாகமான மற்றும் உணர்ச்சிகரமான பயணம்.
மும்பை அணி எனது குடும்பம் போன்றது, எனது சக வீரர்கள், ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகத்தின் அன்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்னும் பல நினைவுகளை உருவாக்கி மேலும் பல புன்னகைகளை எங்கள் மும்பை அணியில் சேர்க்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.