
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. டி20 உலகக் கோப்பை 2022 தொடரில், இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. அப்போது ரோஹித், ராகுல், சூர்யகுமார், ஹார்திக் என நடையைக் கட்ட, கோலி மட்டும் தனி ஒருவனாக கடைசிவரை களத்தில் இருந்தார். எப்படி போட்டாலும் அடிக்குறாரு பாஸ்னு ஹரிஸ் ராவுஃப்பை கதறவிட்டு அணிக்கு கோலி வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.
கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்ததுதான், வெற்றிக்கு முக்கிய காரணம். இதனைத் தொடர்ந்து நெதர்லாந்துக்கு எதிராகவும் 44 பந்துகளில் 62 ரன்களை குவித்து, நெட் ரன்ரேட் உயர்வுக்கு காரணமாக இருந்தார். ரோகித் சர்மாவும் நெதர்லாந்துக்கு எதிராக 37 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
இந்த நிலையில் இந்திய அணி வெற்றி குறித்து பேசிய கவுதம் கம்பீர், இந்திய அணியில் ஒரு வீரருக்கு பாராட்டு கிடைக்க வேண்டும் என்றால் அது சூரியகுமார் யாதவுக்கு தான் என்று கூறியுள்ளார்.