
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சர்ச்சை நடந்து கொண்டே இருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாட்காஸ்ட்கள் (Podcast) மற்றும் நேர்காணல்களில் தொடர்ந்து கூறிவரும் கருத்துகளே இதற்குக் காரணமாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் தற்சமயம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்ர் முகமது ஹபீஸின் கருத்துக்கு பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கொடுத்துள்ள பதில் கருத்தானது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
அதன்படி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பாகிஸ்தான் வீரர்கள் டிரஸ்ஸிங் ரூமில் தூங்குவது குறித்து ஹபீஸ் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதன்படி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியின் இடைக்கால பயிற்சியாளராக முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த இரு தொடர்களிலும் பாகிஸ்தான் அணி படுமோசமான தோல்விகளைச் சந்தித்தது.
இதனையடுத்து முகமது ஹபீஸின் பதவியையும் அத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்திருந்தது. இந்நிலையில் முகமது ஹபீஸ் சமீபத்தில் மைக்கேல் வாகன் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரிடம் பாட்காஸ்டில் உரையாடினார். அதில் பேசிய் ஆவர் "டெஸ்ட் போட்டிகளின் போது வீரர்கள் தங்களது உடைமாற்று அரையில் தூங்குவதை அனுமதிக்க முடியாது. எப்போதும் 4-5 வீரர்கள் டிரஸ்ஸிங் அறையில் தூங்குகிறார்கள். ஒரு குழு இயக்குனராக நான் அதை அனுமதிக்க வேண்டுமா?” என்ற கருத்தினை தெரிவித்திருந்தார்.