
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசனானது பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதன்படி இந்த் சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேற்கொண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, இத்தொடரில் பங்கேற்று விளையாடவுள்ள 8 அணிகளும் இருதரப்பு தொடர்களில் விளையாடி தங்களை தயார் செய்து வருகின்றன. இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக ஆஃப்கானிஸ்தானின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து தனது கணிப்பு தெரிவித்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்துள்ள அணிகள் பட்டியலில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியை தெர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.