
ICC Womens T20I Rankings: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி கேப்டன் ஹீலில் மேத்யூஸ் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதன்பின் நடைபெற்ற டி20 தொடரில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமனில் வைத்திருந்தன.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹீலி மேத்யூஸ் இந்த போட்டியின் ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதை வென்று அசத்தியுள்ளார்.