
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் 2023 ஆம் ஆண்டிற்கான 16ஆவது சீசன் மிகவும் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில், இடம் பெற்றுள்ள 10 அணிகளுமே சிறப்பாக விளையாடி வருகின்றன. இதுவரையில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மட்டும் இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை.
கடந்த 3 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சிஎஸ்கே அணி ருத்துராஜ் கெய்க்வாட், தோனி, ராயுடு, கான்வே ஆகியோரது அதிரடி ஆட்டத்தால் 217 ரன்கள் குவித்தது.
பின்னர் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து, ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு பலரும் பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர். இந்தப் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி மற்றும் சான்ட்னர் சிறப்பாக பந்து வீசி வெற்றி தேடிக் கொடுத்தனர். இவர்கள், சிறப்பாக பந்து வீசவில்லை என்றால் இந்தப் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை கண்டிருக்கும்.