
'He Has A Process': Rashid Khan Reveals Why Virat Kohli Is Successful Than Others (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார். இதன் காரணமாக இவர் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராகவும் திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் விராட் கோலி ஏன் மற்றவர்களை விட சிறந்த வீரராக உள்ளார் என்பது குறித்து ஆஃப்கானிஸ்தன் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ரஷீத் கான்,“நீங்கள் பேட்ஸ்மெனுக்கு எதிராக நன்றாக பந்து வீசினால் அவர், அழுத்தம் காரணமாக தவறான ஷாட்டை விளையாடி ஆட்டம் இழக்க நேரீடும். ஆனால் விராட் கோலி அழுத்தமான சூழலிலும் தனது திறனை வெளிப்படுத்தும் திறன் படைத்தவர்.