
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய அணி ஆஃப்கானிஸ்தான அணியை 172 ரன்களில் சுருட்டியது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 15.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து எட்டியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் தூபே 32 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார்.
இந்நிலையில் ஷிவம் தூபே குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “ஷிவம் துபே பந்தினை அடிக்கும் அபாரமான திறமை இருக்கிறது. அவர் குழந்தை அல்ல, அவருக்கு 30 வயது. தாமதமாகத் விளையாடத் தொடங்கினார். இடையில் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடவில்லை. குழந்தையாக இருந்தபோது, சில குடும்ப சிக்கல்கள் காரணமாக கிரிக்கெட்டை விட்டுவிட்டு திரும்பி வந்தவர்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒரு போட்டியில் அரைசதம் அடித்தார். அதன் பிறகு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் மீண்டும் திரும்பி வந்தார், ஆனால் அவர் இங்கு விளையாடிய இரண்டு போட்டிகளில் 60-க்கும் அதிகமான ஸ்கோர்களை எடுத்தார். இரண்டு போட்டிகளிலும் ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாக இருந்தது. மேலும் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்தார். அவர் அடிக்கும் போது, யுவராஜ் சிங்கை லேசாக நினைவுபடுத்துகிறார்.