டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க்கை பாராட்டிய பாட் கம்மின்ஸ்!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதையடுத்து டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார் ஆகியோரை அந்த அணி கேப்டன் பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் 180 ரன்களில் அல் அவுட்டானது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்களை குவித்தது.
அதன்பின் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா அணியில் நிதீஷ் ரெட்டி 42 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தவிர்த்து வேறெந்த வீரரும் ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் இந்திய அணி 175 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், ஆஸ்திரேலிய அணிக்கு 19 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Trending
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்ப 14 ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.
இப்போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இது எங்களுக்கு ஒரு சிறந்த வாரம், நாங்கள் பெர்த்தில் இருக்க விரும்பும் அணியிலிருந்து நாங்கள் வெகு தொலைவில் இருக்கிறோம் என்பது தெரியும். நாங்கள் எப்படி விளையாட விரும்புகிறோம் என்பதை இப்போட்டி காண்பித்துள்ளது. நான் மகிழ்ச்சியாக இருந்தேன், பெர்த்தில் நான் எப்படி பந்து வீசினேன் என்பதில் எனக்கு வருத்தம் இல்லை. அதற்கு பதிலாக இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக நினைக்கிறேன்.
மேலும் ஸ்டார்க் போன்ற ஒருவரைக் கொண்டிருப்பது எங்களின் அதிஷ்டமாகும். ஏனெனில் அவர் ஒவ்வொரு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன், அதை மீண்டும் மீண்டும் செய்கிறார். அவர் இப்போது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சிறப்பாக செய்துவருகிறார். இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய ட்ராவிஸ் ஹெட் அதிகமாக விருப்பப்படுவார். அவரின் பேட்டிங் தான் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பியது.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங்கின் போது ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறும் நிலையில் இருந்தது. ஆனால் ட்ராவிஸ் ஹெட் தனது பேட்டிங்கின் மூலம் ஆட்டத்தை எங்கள் பக்கம் முழுவதுமாககொண்டு வந்துவிட்டார். அதிலும் முக்கியமானது முதல் இன்னிங்ஸில் 157 ரன்கள் முன்னிலை பெற்றது தான். மேலும் அச்சமயம் பந்துவீசவும் ஏதுவான நேரமாகவும் இருந்தது. அதுவே எங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now