
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் 9 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக வரலாற்றில் தொடர்ந்து 8ஆவது முறையாக இந்தியாவுக்கு எதிராக உலகக் கோப்பையில் தோற்ற அந்த அணி கத்துக்குட்டியான ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராகவும் அவமான தோல்வியை பதிவு செய்தது.
அந்த வகையில் 1992 போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறினால் முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இந்த தோல்விகளுக்கு பாபர் ஆசாம் கேப்டனாக முன்னின்று சிறப்பாக அணியை வழிநடத்து தவறியதும் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்காததும் முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக 2019க்குப்பின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் 4 வருடங்கள் கழித்தும் இன்னும் முன்னேற்றத்தை காணாததால் பதவி விலக வேண்டும் என்று ஷாஹித் அஃப்ரிடி போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்து இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போதைய தோல்வியால் பாபர் ஆசாமை பதவியிலிருந்து நீக்கலாம் என்று நினைப்பது தவறு என்று இந்திய ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.