Advertisement
Advertisement
Advertisement

AUS vs WI: ஒருநாள், டி20 தொடரிலிந்து டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வு!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான எஞ்சியுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 03, 2024 • 13:59 PM
AUS vs WI: ஒருநாள், டி20 தொடரிலிந்து டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வு!
AUS vs WI: ஒருநாள், டி20 தொடரிலிந்து டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வு! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமன் செய்த நிலையில், முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மீதமுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளர். தொடர் பணிச்சுமை காரணமாக அவருக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

Trending


அதேபோல், ஆஸ்திரேலிய அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஸோவியர் பார்ட்லெட் இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் விளையாடிய பார்ட்லெட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கும் பணிச்சுமை காரணமாக இந்த ஓய்வு வழங்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதையடுத்து இரண்டாவது போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் டிராவிஸ் ஹெட்டிற்கான மாற்று வீரரை ஆஸ்திரேலிய அணி அறிவிக்கவில்லை. இதனால் அறிமுக வீரர் ஜேக் ஃபிரெசருக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு கிடைப்பது உறுதியாகியுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement