
Herschelle Gibbs reveals three teams as strong favourites to win T20 World Cup 2021 (Image Source: Google)
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் மிகத்தீவிரமாக தயாராகிவருகின்றன.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஒன்று, கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்துவருகிறது. அந்த அணியில் கெய்ல், பொல்லார்டு, ட்வைன் பிராவோ, எவின் லூயிஸ் என டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் பலரையும் கொண்டுள்ளது என்பதால், அந்த அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.