
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இரண்டு ஆண்டுகள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரராகப் பார்க்கப்படும் டேவிட் வார்னர் சமீப காலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காமல் இருந்து வந்தார். ஆனால் தற்போது ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக முக்கியப் பங்கு வகிப்பார் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டோனல்ட் நம்பிக்கை தெரிவித்தார்.