
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். திறமையில் இவர்களுக்கு சற்றும் சளைத்திராத வீரர் கேஎல் ராகுல். கேஎல் ராகுல் அவரது இளம் வயதிலிருந்தே முன்னாள் ஜாம்பவான்கள் பலராலும் புகழப்பட்டுவருகிறார். அவரது பேட்டிங் திறமை சிறுவயதிலிருந்தே கவனிக்கப்பட்டுவருவதுடன், பாராட்டுகளையும் குவித்துவருகிறது.
ஸ்டிரைட் டிரைவ், கவர் டிரைவ், ஆன் டிரைவ், புல் ஷாட், ஹூக் ஷாட், ஃப்ளிக் ஷாட், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் என அனைத்துவிதமான ஷாட்டுகளையும் ஆடக்கூடிய அபார திறமைசாலி கேஎல் ராகுல். பல முறை தனது திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவிற்கு எதிரான பஞ்சாப் அணியின் கடைசி லீக் போட்டியில், கேஎல் ராகுல் அதை மீண்டும் செய்துகாட்டினார். பஞ்சாப் அணி சிஎஸ்கே நிர்ணயித்த இலக்கை 14 ஓவர்களில் அடித்து, கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அவற்றின் கடைசி போட்டிகளில் தோற்றால், பஞ்சாப்புக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இருந்தது.