
நட்சத்திரம் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இந்தியாவின் உலகக்கோப்பை நாயகர்களில் முக்கியமானவராக போற்றப்படுகிறார். டெல்லியை சேர்ந்த அவர் இடது கை தொடக்க வீரராக அதிரடியாக விளையாடி இந்தியாவின் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2007 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 75 ரன்கள் அடித்த அவர் தோனி தலைமையில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
அதை விட 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆரம்பத்திலேயே இந்தியா தடுமாறிய போது நங்கூரமாக நின்று 97 ரன்கள் அடித்த அவர் 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோனி தலைமையில் கோப்பையை வெல்வதற்கு ஒரு காரணமாக அமைந்தார். இருப்பினும் அந்த 2 முக்கிய போட்டிகளிலுமே அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கவில்லை.
அதை விட ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலியை அடிக்கடி விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருப்பதால் பெரிய ரசிகர்களுக்கு பிடிக்காதவராகவே அறியப்படுகிறார். இந்நிலையில் கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில் ரசிகர்களால் புரிந்து கொள்ளப்படாத வீரர் என்று ரவிச்சந்திரன் பாராட்டியுள்ளார்.