
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அதிலும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று வியக்க வைத்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லேவில் நாளை (ஆக.25) தேதி தொடங்குகிறது. தோல்வியில் இருந்து மீண்டு வரும் முனைப்பில் இங்கிலாந்து அணி மிகத் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், இந்திய அணியின் லார்ட்ஸில் கடைசி நாளில் வெளிப்படுத்திய மிரட்டலான ஃபார்மை அப்படியே மூன்றாவது போட்டியிலும் வெளிப்படுத்தும் முனைப்புடன் உள்ளது.
இப்போட்டிக்கான இந்திய அணி தேர்வில் தான் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது, தொடர்ந்து சொதப்பி வரும் புஜாராவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.