
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு, இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்காளதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.
இதையொட்டி நியூசிலாந்து மற்றும் வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ரோஹித் ஷர்மா, விராத் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியுடன் நடக்க உள்ள ஒருநாள் தொடரில் இந்திய அணி ஷிகர் தவான் தலைமையிலும், டி20 தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலும் களமிறங்குகிறது.
ஆனால் இதில் பிரித்வி ஷா, நிதிஷ் ரானா, ரவி பிஷ்னோய், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்திருக்கின்றனர். இதில் வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் மட்டும் இடம்பிடித்துள்ள உமேஷ் யாதவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.