
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா 40 ரன்களும், கில் 23 ரன்களும் எடுக்க கோலி, ஸ்ரேயாஸ் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.
இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களில் ஆட்டம் இழக்க கடைசி வரை நின்று விளையாடிய விராட் கோலி 101 ரன்கள் சேர்த்தார்.இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினை விராட் கோலி சமன் செய்து இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய சாதனை சமன் செய்யப்பட்டதற்கு சச்சின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அதில், “விராட் கோலி நீங்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறீர்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் எனக்கு 49 இருந்து 50 வயது ஆக 365 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் நீங்கள் 49 லிருந்து 50 வந்து என்னுடைய ரெக்கார்டை இன்னும் சில தினங்களிலே நீங்கள் முறியடிப்பீர்கள் என நான் நம்பிக்கை கொள்கிறேன். வாழ்த்துக்கள்” என்று சச்சின் பாராட்டி உள்ளார்.