
Hopefully, AB de Villiers will be back at RCB next year in some capacity: Virat Kohli (Image Source: Google)
பெங்களூரு அணியின் இணைய தளத்துக்கு விராட் கோலி இன்று பேட்டி அளித்தார். அதில் தனது ஃபார்ம் மற்றும் பெங்களுரு அணியின் கேப்டன்ஷி பதவியிலிருந்து விலகியது குறித்து பேசினார்.
அதன்பின் ஏபி டிவில்லியர்ஸ் உடனான நட்பு குறித்து விராட் கோலி பேசினார். அதில், டிவில்லியர்ஸை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன். தற்போது டிவில்லியர்ஸ் குடும்பத்துடன் அமெரிக்காவில் கோல்ப் தொடரை கண்டு களித்து வருகிறோம். அவர் அமெரிக்காவில் இருந்தாலும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி விளையாடும் போட்டியை பின் தொடர்வதாக கூறினார்.
அடுத்த ஆண்டு நீங்கள் டிவில்லியர்ஸை ஆர்சிபி அணியில் எதிர்பார்க்கலாம் என்று கூறிய விராட் கோலி, அச்சச்சோ உண்மையை உளறிவிட்டேனா என்று கூறினார். 38 வயதான விராட் கோலி, பயிற்சியாளராக வருகிறாரா இல்லை மெண்டராக வருகிறாரா இல்லை வீரராகவே வருகிறாரா என்று தெரியவில்லை.