
இந்தியா வந்துள்ள தென் ஆபிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், ஐபிஎல் 15ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்ட உம்ரான் மாலிக், தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணிக்கு நீண்ட காலமாக விளையாடமல் இருக்கும் தினேஷ், புதுமுக வீரராக இருக்கும் உம்ரான் மாலிக் ஆகியோர், இந்திய அணிக்காக இன்னமும் தனது பார்மை நிரூபிக்காமல் இருக்கும் நிலையில், இருவருக்கும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என பலர் பேசி வருகிறார்கள்.