
ஐபிஎல் தொடரில் இன்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது குஜராத். இந்தப் போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் சகா இருவரும் மிகச் சிறப்பான துவக்கத்தை தந்தார்கள்.
ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய சகா 10 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 43 பந்தில் 81 ரன்கள் எடுத்து வலிமையான துவக்கத்தை தந்தார். சஹா தந்த இந்த வலிமையான துவக்கத்தை மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் கில் தொடர்ந்து இருபதாவது ஓவரின் கடைசி பந்து வரை எடுத்துச் சென்றார்.
இறுதிவரை களத்தில் நின்ற கில் 51 பந்தில் 94 ரன்கள் குவித்தார். இதில் மொத்தம் இரண்டு பவுண்டர்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. இதைத் தவிர்த்து ஏழு சிக்ஸர்களை கில் நொறுக்கினார். இதன் கார்ணமாக இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார்.