அடுத்த போட்டியில் அஸ்வின் விளையாடுவது சந்தேகம் - கவுதம் காம்பீர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக அடுத்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட வாய்ப்பில்லை என்று கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. டெல்லி கேப்பிடல்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி மற்றும் கேகேஆர் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளன. முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
துபாயில் நாளை(அக்10) இந்த போட்டிநடக்கிறது. இந்நிலையில் இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் சீனியர் வீர ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
Trending
இதுகுறித்து பேசியுள்ள கவுதம் காம்பீர், “அஸ்வின் அடுத்த போட்டியில் ஆட வாய்ப்பில்லை. அஸ்வினுக்கு பதிலாக ஒரு வெளிநாட்டு வீரர் சேர்க்கப்படலாம். பவுலிங் ஆல்ரவுண்டராக ரிபால் படேல் விளையாடுவார். ஸ்டோய்னிஸ் ஆட தயாராக இருந்தால் அவரை ஆடவைப்பார்கள். அஸ்வின் அணியில் எடுக்கப்படவில்லை என்றாலும், அவர் தரமான பவுலரே.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ரிக்கி பாண்டிங் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் அஸ்வின் ஃபார்மின் மீது திருப்தியாக இல்லை. அஸ்வினுக்கு ஒரு ஓவர் கொடுத்ததன் மூலம், அவர் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது என தெரிகிறது” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now