அதிக வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் - அம்பத்தி ராயுடு!
ஐபிஎல் அணிகளை அதிக வீரர்களை தக்கவைக்க அனுமதிக்கப்படும் பட்சத்தில், அந்த அணியில் உள்ள முக்கியமான வீரர்கள் அதே அணியில் தொடர்வார்கள் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஐபிஎல் தொடரானது 18ஆவது சீசனை நோக்கி பயணித்து வருகிறது. அந்தவகையில் எதிர்வரும் 18ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மாத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இத்தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா எலாமும் நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன. ஏனெனில் ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கவுள்ள வீரர்கள் யார் யார் என்பது குறித்த விவாதங்களும் தொடங்கியுள்ளன.
மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் அணிகள் வீரர்களை தக்கவைப்பதற்கான ரிடென்ஷன் முறையில் மாற்றங்களை கொண்டு வரவும் பிசிசிஐயிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளில் ஐபிஎல் அணிகள் மற்றும் பிசிசிஐ ஆகியவை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்தின் போது ஐபிஎல் அணிகளுக்கு கூடுதல் வீரர்களை தக்கவைப்பதற்கு பிசிசிஐ அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், சிஸ்கேவின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரையில் ஐபிஎல் அணிகள் அதிகமான வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கூறுவேன். ஏனெனில், அணி நிர்வாகம் வீரர்களுக்கு அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. ஒவ்வொரு அணிக்கும் முக்கியமான வீரர்கள் இருக்கிறார்கள். அந்த வீரர்களே ஒவ்வொரு முறையும் அணியை தனித்துவமாக மாற்றுகிறார்கள். அதிக வீரர்களை தக்கவைக்க அனுமதிக்கப்படும் பட்சத்தில், அந்த அணியில் உள்ள முக்கியமான வீரர்கள் அதே அணியில் தொடர்வார்கள். அதனால் அனைத்து முக்கிய வீரர்களையும் தக்கவைக்க அனுமதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக ரிடென்ஷன் விதிகளிலும் சில மாற்றங்கள் செய்வதற்கு ஐபிஎல் அணிகளிடம் ஆலோசனை கேட்கபட்டது. இதில் ஒரு சில அணிகள் ரிடென்ஷன் முறையில் 8 வீரர்களை தேர்வு செய்யவும், சில அணிகள் 5 முதல் 7 வீரர்களை தேர்வு செய்யவும், சில அணிகள் அனைத்து வீரர்களும் ஏல முறையில் மட்டுமே வாங்கப்பட வேண்டும் எனவும் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ள கருத்தானது ஐபிஎல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி வருகின்றது.
Win Big, Make Your Cricket Tales Now