-mdl.jpg)
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைந்து விடும். அதற்கு அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.
தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, இவ்விரு தொடர்களுக்கான இந்திய வீரர்களின் பட்டியலை வெளியிட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
நியூசிலாந்து தொடரில் ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் தலைமை வைக்கிறார். டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா தலைமை வைக்கிறார். நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இளம் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சபாஷ் அஹ்மது இடம்பெற்று இருக்கிறார். தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நன்றாக செயல்பட்டதால் அவருக்கு இன்னொரு வாய்ப்பாக நியூசிலாந்து தொடரில் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.