
மும்பை வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்து அசத்தியது.
அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களைக் குவித்தார். இது அவரின் 50ஆவது சதமாகும். இதுவரை சச்சினின் 49 சதமே கிரிக்கெட் வரலாற்றில் தனிநபரின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. இன்று விராட் கோலி அச்சாதனையை முறியடித்து சச்சின் டெண்டுல்கருக்கு இந்த சதத்தை சமர்ப்பணம் செய்தார்.
இந்த நிலையில் சதம் அடித்தது குறித்து பேசிய விராட் கோலி, “கொல்கத்தாவிலும் சொன்னேன் ஒரு பெரிய மனிதர் என்னை வாழ்த்தினார். இதெல்லாம் உண்மையில் ஒரு கனவு போல இருக்கிறது. அதே பெரிய மனிதர் சச்சின் என்னை வாழ்த்தினார். இதெல்லாம் விவரிக்க முடியாத உணர்வாக இருக்கிறது. இன்று மீண்டும் ஒரு பெரிய ஆட்டம்.