
வாங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இத்தொடருக்கான இரு அணிகளையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
மேற்கொண்டு இப்போட்டிக்கான இந்திய அணி சென்னை வந்தடைந்து தங்களது பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் வங்கதேச அணியும் விரைவில் சென்னை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வங்கதேச அணியானது சமீபத்தில் தான் பாகிஸ்தனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதுடன், இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்து தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இதனால் அதே உத்வேகத்துடன் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வங்கதேச அணி கையாளும் என்பதால் இத்தொடரின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன. இந்நிலையில், இந்திய அணிக்கு வங்கதேச அணியானது தொந்தரவைக் கொடுக்கது என தான் நினைப்பதாக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.