இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை - கேஎல் ராகுல்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியதற்கான காரணத்தை கேஎல் ராகுல் விளக்கியுள்ளார்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னர் எளிய இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்கியது. ஆனல் அந்த அணி தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், ஒருபுறம் ராகுல் சிறப்பாக விளையாடி 68 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கையிலிருந்து வெற்றியை 7 ரன்களில் குஜராத்திடம் தாஃபவார்த்தது.
Trending
இந்நிலையில் இத்தோல்விகு குறித்து பேசிய கேஎல் ராகுல், “இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது நடந்தது. எங்கே தவறு என்று விரல் வைக்க முடியாது, ஆனால் இன்று 2 புள்ளிகளை இழந்தோம், இது தான் கிரிக்கெட். நாங்கள் பந்துவீச்சில் புத்திசாலித்தனமாக இருந்தோம் என்று நினைத்தேன். ஏனெனில் நாங்கள் அவரகளை 135 ரன்களுக்கு கட்டுப்படுத்தினோம்.
நாங்கள் பேட்டிங்கில் நன்றாகத் தொடங்கினோம். ஆனால் இந்த தோல்வியை நாங்கள் சந்தித்துள்ளோம். ஆனால் இன்னும் நீண்ட தூரம் செல்ல, 7 ஆட்டங்களில் 8 புள்ளிகளை எடுக்க வேண்டிய சூழலிற்கு தள்ளப்பட்டுள்ளோம். ஏனெனில் இன்று நாங்கள் போட்டியை இழந்துள்ளோம். அதிலும் நாங்கள் வெற்றிக்கு மிக அருகில் இருந்தோம். நான் உண்மையில் ஆழமாக பேட்டிங் செய்ய முயற்சிக்கவில்லை. ஏனெனில் நான் இன்னும் எனது ஷாட்களை விளையாட விரும்பினேன், பந்து வீச்சாளர்களை அடிக்க விரும்பினேன்.
ஆனால் நூர் மற்றும் ஜெயந்த் ஆகியோரது அந்த 2-3 ஓவர்களில் நன்றாகப் பந்து வீசினர். இன்னும் சில வாய்ப்புகளை கையில் எடுத்திருக்க வேண்டும், அவர்கள் கண்ணியமாக பந்து வீசினார்கள், ஆனால் சில பவுண்டரி வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டோம் என்று நினைக்கிறேன். கடைசி 3-4 ஓவர்களில் அழுத்தம் எங்களுக்கு கிடைத்தது, அதுவரை நாங்கள் நன்றாக விளையாடினோம். இருந்தாலும் அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள் என்பது தான் உணமை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now