-mdl.jpg)
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றில் படுதோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை போல இந்த டி20 உலகக்கோப்பை தொடரும் இந்திய அணிக்கு சாதகமாக அமையவிட்டாலும், இந்த தொடரில் முன்னாள் கேப்டன் விராட் கோலி விளையாடிய விதம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது என்றால் அது மிகையாகாது.
பழைய விராட் கோலியின் ஆட்டத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த வருட டி20 உலகக்கோப்பை தொடர் விருந்தாக அமைந்தது. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தனியாக போராடி இந்திய அணிக்கு வெற்றி பெற்று கொடுத்ததையும், இக்கட்டான போட்டியின் 19ஆவது ஓவரில் விராட் கோலி அடித்த இரண்டு மிரட்டல் சிக்ஸர்களையும் அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் இன்னிங்ஸே அவரது கிரிக்கெட் கேரியரின் மிக சிறந்த இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது, விராட் கோலியும் இதனை பல இடங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்.