Advertisement

இங்கிலாந்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் - மொயீன் அலி!

டி20 உலக கோப்பையை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதை சுட்டிக்காட்டிய மொயின் அலி, இங்கிலாந்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 03, 2022 • 22:44 PM
"I don't think we're favorites" - Moeen Ali names 2 prime contenders for the trophy (Image Source: Google)
Advertisement

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து அணிகளும் டி20 உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன.

எனினும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் இதே கருத்தைத்தான் கூறிவருகின்றனர். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வலுவான மற்றும் நல்ல பேலன்ஸான அணியாக திகழ்கிறது. 

Trending


ஆரோன் ஃபின்ச் தலைமையிலான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி வலுவான அணியாக திகழ்வதுடன், டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவான அணிகளாக உள்ளன. ஆஃப்கானிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி பெரிய அணிகளையே வீழ்த்திவருகிறது.

தசுன் ஷனாகா தலைமையில் இளம் வீரர்கள் நிறைந்த அச்சுறுத்தும் படையாக இலங்கை அணி உருவெடுத்துள்ளது. எனவே டி20 உலக கோப்பையை வெல்ல அணிகளுக்கு இடையே போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என்பது மட்டும் உறுதி. இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகள் பலமாக இருந்தாலும், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து இங்கிலாந்து வீரர் மொயின் அலி பேசியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து அணி 4-3 என வென்றது. மொயின் அலி கேப்டன்சியில் வலுவான பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

அந்த வெற்றிக்கு பின் டி20 உலக கோப்பை குறித்து பேசிய மொயின் அலி, “நாங்கள் உலக கோப்பையை வெல்வோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பெரிய அணிகளே எதிர்கொள்ள பயப்படும் அணி நாங்கள்; அபாயகரமான அணி.  ஆனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தான் ஃபேவரைட்ஸ்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement