
ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி நடைபோட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இந்த மாத இறுதியில் துவங்கும் ஆசிய கோப்பை தொடர் மற்றும் அக்டோபர் மாதம் துவங்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் என இரு பெரும் தொடர்களை எதிர்கொள்ள உள்ளது.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடி லீக் சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது. கடந்த தொடரை போல் எதிர்வரும் தொடரிலும் இந்திய அணி சொதப்பிவிட கூடாது என விரும்பும் முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அதே போல் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாததால், யார் யாருக்கு இடம் கொடுக்கலாம் என்பது குறித்தான தங்களது கருத்துக்களையும் முன்னாள் வீரர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், தற்போதைய இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்தும், எதிர்வரும் டி20 உலகக்கோப்பை குறித்தும் பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அதிரடி வீரர் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா.. கிடைக்காத.. என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.