
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் டவுட் முறையில் ஆட்டம் இழந்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு நிமிடத்திற்குள் களத்திற்கு வரவில்லை என்று கூறி வங்கதேச அணியினர் இந்த விதியை பயன்படுத்தி அவுட் வழங்குமாறு நடுவரிடம் கேட்டனர். இதன் மூலம் நடுவர் அவுட் வழங்கி இருக்கிறார்.
இதுதான் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. வங்கதேச அணியின் இந்த செயல் மிகவும் மோசமானது என்று மேத்யூஸ் விமர்சித்து இருக்கிறார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி ஒரு அணி கீழ்த்தனமாக நடந்து கொண்டு தான் பார்த்ததில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், “தாம் ஏன் அந்த விதியை பயன்படுத்தினேன் என்பது குறித்து பேசினார். மேத்யூஸ் களத்திற்கு வராத நிலையில், எங்கள் அணி வீரர் ஒருவர் நாம் இதற்கு அவுட் கேட்டால் மேத்யூஸ் ஆட்டம் இழந்து விடுவார் என்று எனக்கு யோசனை வழங்கினார். நான் இது குறித்து நடுவரிடம் கேட்டு டைம் அவுட் முறையை பயன்படுத்த விரும்பினேன்.