
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் ஷிகர் தவான். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய ஆவரேஜ் 40 ஆக இருந்த பொழுதே, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஐபிஎல் தொடரில் வருடம் தோறும் குறைந்தது 400 ரன்களுக்கு மேல் எடுத்துக் கொண்டிருந்த பொழுதே, இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டபட்டார்.
அதைவிட இந்திய மண்ணில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஷிகர் தவான் விளையாடுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், அவருடைய கேப்டன்ஷியில் அணிக்குள் நுழைக்கப்பட்ட ஷுப்மன் கில்லை எடுத்து, இவரை வெளியே அனுப்பி சோகமான சூழ்நிலையை உருவாக்கினார்கள்.
இந்நிலையில், அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை போன்று அவரது சொந்த வாழ்க்கையும் அமைந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த விவாகரத்து ஆன ஒரு பெண்ணை அவர் மணம் முடித்திருந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் அவருடன் சில காரணங்களால் விலகி வந்துவிட்ட ஷிகர் தவான் விவாகரத்து பெற்றுக் கொண்டார்.