
'I have got peace by looking at the brighter side always': Hardik Pandya (Image Source: Google)
டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் பலப்பரிட்சை மேற்கொள்ள உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா மீண்டும் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட தனது குடும்பம் உறுதுணையாக இருந்ததாக கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா, “நேர்மறையான விஷயங்களை எடுத்துக் கொண்டு அணியில் மீண்டும் சிறப்பான பங்களிப்பை கொடுக்க நிறைய உழைக்க வேண்டியிருந்தது. இது என்னுடைய குடும்ப உறுப்பினர்களால் சாத்தியமானது.