
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியனது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், லீக் சுற்றுடனே தொடரில் இருந்தும் வெளியேறியது.
இதனையடுத்து அணியின் கேப்டனாக செயல்பட்ட பாபர் ஆசாமின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக தொடர்வாரா என்ற கேள்விகளும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளனர். முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு, அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
அவருக்குப் பதிலாக ஷஹீன் அஃப்ரிடி மற்றும் ஷான் மசூத் ஆகியோர் பாகிஸ்தானின் சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொட்ருக்காக பாபர் ஆசாம் மீண்டும் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையிலும், அந்த அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்நிலையில் தான் ஷாஹீன் அஃப்ரிடியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஏன் என்ற கேள்விகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நோக்கி எழுப்பட்டு வருகிறது.