
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 157 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ரஸா 61 ரன்களையும், கிரேய்க் எர்வின் 75 ரன்களையும் சேர்த்த நிலையில், இறுதியில் அதிரடியாக விளையாடிய சீன் வில்லியம்ஸ் 49 ரன்களையும் சேர்த்து அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 243 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன்பின் இரண்டாவது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மத் ஷா 139 ரன்களையும், இஸ்மத் அலாம் 101 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 363 ரன்களைக் குவித்தது. மேற்கொண்டு ஜிம்பாப்வே அணிக்கு 278 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில் கேப்டன் கிரேய்க் எர்வின் 53 ரன்களையும் சிக்கந்தர் ரஸா மற்றும் பென் கரண் ஆகியோர் தலா 38 ரன்களையும் சேர்த்தனர்.