தன்னை விமர்சார்பவர்கள் குறித்து விராட் கோலி கருத்து!
நீங்கள் பிரச்சினையாக கருதும் விஷயம் எனக்கு எளிதான ஒன்றுதான் என்று தன்னை விமர்சார்பவர்கள் குறித்து விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
சமகால கிரிக்கெட்டின் முடி சூடா மன்னாக திகழ்ந்து வந்த விராட் கோலி, கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறார். இதனால் மிக கடுமையான விமர்ச்சனங்களையும் விராட் கோலி எதிர்கொண்டு வருகிறார்.
இந்திய அணியின் அசைக்க முடியாக நம்பிக்கையாக திகழ்ந்து வந்த விராட் கோலிக்கு, இனி இந்திய அணியில் இடமே கொடுக்கக்கூடாது, அது இந்திய அணியை பலவீனப்படுத்தும் என முன்னாள் வீரர்கள் பலர் பகிரங்கமாக பேசி வருகின்றனர். பிசிசிஐயும் விராட் கோலிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்து வருகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.
Trending
குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சொதப்பாலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் விண்டீஸ் அணிக்கு எதிரான விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. கிரிக்கெட் தொடரில் எழுபதாவது சதத்தை அடித்து ஆயிரம் நாளை தொட்டுவிட்டதால் விராட் கோலி எதிர்வரும் ஆசிய கோப்பையில் எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது.
இதன் காரணமாக, விராட் கோலி குறித்தும் ஆசிய கோப்பை குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் அதிகப்படியான தகவல்களை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தன்னை பற்றி விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் மறைமுகமாக பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி பேசுகையில்,“தற்பொழுது என்னுடைய ஆட்டம் எந்த இடத்தில் நிற்கிறது என்பது எனக்கு நன்றாக தெரியும். நிலைமை, சூழல் மற்றும் வெவ்வேறு விதமான பந்துவீச்சு என எதையும் சமாளிக்கும் திறமையில்லாமல் இருந்திருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை கடந்து வந்திருக்க முடியாது. இந்த நிலையை கடப்பது மிகவும் எளிதான ஒன்றுதான் இதை நான் அப்படியே விட்டு விட மாட்டேன்.
இதிலிருந்து நான் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். மேலும் இதில் இருக்கும் உண்மையான மதிப்புகளை உணர விரும்புகிறேன். நான் ஒரு விளையாட்டு வீரன், ஆனால் நானும் மனிதன் தான். நான் எதையெல்லாம் சரியாக செய்ய வேண்டுமோ அதை எல்லாம் சரியாக செய்து வருகிறேன். இதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும் ஆனால் இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீண்டுவிடுவேன். ஏனென்றால் என்னைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.
நான் எதையெல்லாம் கடந்த காலங்களில் சந்தித்தேனோ மற்றும் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறேனோ அதை வைத்து நான் என்னை முடிவு செய்து விட மாட்டேன். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நான் மோசமாக செயல்பட்டதற்கான காரணம் ஒரே மாதிரியான தவறுதான், இதனால் அந்த தவறை சரி செய்து கொண்டு வருகிறேன், ஆனால் நீங்கள் அனைவரும் அதை ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக கருதுகிறீர்கள் ஆனால் உண்மையை சொல்லப்போனால் அதிலிருந்து நான் மீண்டு வருவது மிகவும் எளிதானது.
இதற்கு பயிற்சி செய்தாலே போதும் நான் நன்றாக தான் பேட்டிங் செய்கிறேன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எப்பொழுது என்னுடைய ரிதம் சரியாக உள்ளதோ அப்பொழுது நான் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவேன். இதுவெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையே கிடையாது, இங்கிலாந்தில் நடந்ததை நினைத்து கவலைப்படவில்லை, அப்பொழுதும் நான் சிறப்பாக தான் பேட்டிங் செய்தேன் நான் கடினமாக முயற்சி செய்து மீண்டும் மீண்டும் உயரே செல்ல முயற்சி செய்கிறேன்” என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now