டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் மிகவும் உறுதியாக இருப்பார் - ஷேன் பாண்ட்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருப்பார் என்று ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.
மிகவும் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடர் இனிதே நிறைவு பெற்றது, இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை,மும்பை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
அணியும் புதிது அணிக்கு கேப்டனும் புதிது என்றாலும் தன்னுடைய முதல் தொடரிலேயே குஜராத் அணி கோப்பையை வென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாதான் என்று கூறலாம், அந்த அளவிற்கு இவருடைய பங்களிப்பு குஜராத் அணிக்கு மிகவும் சிறப்பாகவே இருந்தது.
Trending
கடந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட கார்த்திக் பாண்டியா தற்பொழுது மீண்டு வந்து கோப்பையை வென்று இருப்பது அவருடைய கடின உழைப்பை காட்டுவதாக பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட், உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பண்டியா மிகவும் பக்கபலமாக இருப்பார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா குறித்து ஷேன் பாண்ட் பேசுகையில்,“ஹார்திக் பாண்டியா மிகசிறந்த கேப்டனாக திகழ்ந்துள்ளார், அவர் மும்பை அணிக்கு தேர்வான பொழுது மும்பை அணியின் பயிற்சியாளராக அதுதான் எனக்கு முதல் தொடர், நானும் அவரும் அதிக நேரம் ஒன்றாக நேரம் செலவழித்துள்ளோம், அவர் குஜராத் அணியில் தனக்கு கிடைத்த பொறுப்பை சிறப்பாக செய்துள்ளார்.
என்னை பொறுத்தவரையில் நான் அவரை ரொம்பவே மிஸ் செய்கிறேன், அவர் எங்களது அணியில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்,ஏனென்றால் ஹர்திக் பாண்டியா ஒரு தரமான வீரர், நிச்சயம் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் அவர் இந்திய அணிக்கு மிகவும் பக்கபலமாக இருப்பார், ஏனென்றால் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்து விட்டார் மேலும் அவர் கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now