
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கௌகாத்தியில் இன்று நடைபெறவுள்ளது.
இதில் முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் தனது அடுத்தடுத்த தொடர்ச்சியான அரைசதங்களால் இந்திய அணியின் வெற்றிக்கு இஷான் கிஷன் முக்கியப் பங்காற்றினர். மேலும், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இஷான் கிஷன் இரண்டு போட்டிகளில் விளையாடி 47 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் பல போட்டிகளில் விளையாடாதது கவலையளித்தாலும், உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் தொடங்கவிருந்த டி20 தொடரில் கிடைக்கும் வாய்ப்புகளை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளும் பசியுடன் காத்திருந்ததாக இந்திய அணியின் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.