
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக மட்டுமின்றி உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக்களிலும் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் இவர் பெங்களூரு அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். போட்டியின் எந்த நேரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு மேட்ச் வின்னராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலககோப்பை தொடருக்கு பிறகு மேக்ஸ்வெல் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். குறிப்பாக தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வரும் பிக்பேஷ் தொடரில் கூட அவர் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் மேக்ஸ்வெல் ஏன் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார் என்பது குறித்த விவரத்தை அவரே வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சமீபத்தில் நடைபெற்ற தனது நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருந்த போது அந்த பார்ட்டியின் இடையே கொண்டாட்டத்தில் ஈடுபபடும்போது தவறுதலாக அவரது நண்பர் மேக்ஸ்வெல்லின் காலின் மீது விழுந்துவிட்டாராம்.