
இந்த வருட ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகள் விளையாடி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி கடைசியாக நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது. பேட்டிங், பௌலிங் இரண்டிலும் மும்பை அணி படுமோசமாக செயல்பட்டு வந்தாலும், அணிக்கு 22 வயதான இளம் வீரர் திலக் வர்மா மிகுந்த நம்பிக்கை உடன் பேட்டிங்கில் நம்பிக்கை அளித்து வருகிறார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஒற்றை ஆளாக நின்று கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 84 ரன்கள் சேர்த்தார். சிஎஸ்கே அணியுடனான போட்டியிலும் 22 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் கொடுத்தார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட் போன பிறகு, ரோஹித் சர்மாவுடன் பேட்டிங் செய்து 41 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இவரும் ரோகித் சர்மாவும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 67 ரன்கள் சேர்த்தனர். இது தான் வெற்றி பெற மிகவும் உதவியது.
கடந்த சீசனில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மா, முதல் முறையாக ரோஹித் சர்மாவுடன் இணைந்து களத்தில் விளையாடினார். இதற்கு முன்பு வரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் முதல் முறையாக ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடியது பற்றி போட்டி முடிந்த பிறகு, ரோஹித் சர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் உரையாடியபோது இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டு கனவு நனைவானதாக கூறினார் திலக் வர்மா.