
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ரஜ்த் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றும் அசத்தியுள்ளது.
ஒருபக்கம் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ள நிலையில், மறுப்க்கம் ஐபிஎல் தொடரின் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த முறை அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துடன் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறி புள்ளிப்பட்டியலிலும் கடைசி இடத்தில் முடித்தது. அதிலும் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துடன் தொடரை முடிப்பது இதுவே முதல் முறையாகவும் அமைந்தனது.
இதனால் அடுத்த சீசனுக்கான தயாரிப்புகளில் சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா என்ற கேள்வியானது அதிகரித்துள்ளது. ஏனெனில் தற்சமயம் 43 வயதை எட்டியுள்ள தோனி, மேற்கொண்டு ஒரு ஐபிஎல் சீசனில் விளையாடும் அளவிற்கான உடற்தகுதியில் இல்லை. இதனால் இதுவே அவருடைய கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும் என்ற கருத்துகளும் வெளியாகி வருகின்றன.