
டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. டி20 உலகக் கோப்பை 2022 தொடர் துவங்குவதற்கு முன்பு, நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார்.
இருப்பினும், தற்போது சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டங்களில் ராகுலின் ஆட்டத்தில் திருப்தி இல்லை. ராகுல் எத்தனை ரன்கள் அடித்து, களத்தில் இருக்கிறார் என கூகுளில் தேடுவதற்குள் ஆட்டமிழந்துவிடுகிறார். அவுட்டே இல்லையென்றாலும், ‘நான் அவுட்தான்’ என கடந்த போட்டியில் அவர் நடையைக் கட்டியதெல்லாம் பார்த்தபோது, ‘எப்படியும் அடுத்த ஓவருக்குள்ள அவுட் ஆகிடுவோம். இப்போவே கிளம்பிடுவோம்’ என்ற மனநிலையில் ராகுல் இருந்ததாகவே கருதப்படுகிறது. அந்த அளவுக்கு ராகுலின் மன உறுதி குறைந்திருக்கிறது.
இதனால், கே.எல்.ராகுலை நீக்கிவிட்டு அடுத்தடுத்த போட்டிகளில் ஓபனராக ரிஷப் பந்தை களமிறக்க வேண்டும். அப்போதுதான், அணிக்கு அதிரடி தொடக்கம் கிடைக்கும் என பலர் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.