
வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இதற்கான வேலைகளில் எல்லா அணிகளும் தற்போது இருந்தே ஈடுபட்டு வருகின்றன. ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் அணிகளின் பயிற்சி முகாம்கள் தற்போது அந்தந்த அணிகளின் ஹோம் கிரவுண்டுகளில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் எல்லா ஐபிஎல் அணிகளின் ஹோம் கிரவுண்டுகளிலும் நடக்க இருப்பதால் ரசிகர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகி தங்களது முதல் தொடரிலேயே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் துரதிஷ்டவசமாக பிளே ஆப் சுற்று போட்டிகளில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த வருட ஐபிஎல் போட்டிகளுக்காக அந்த அணி சிறப்பாக தயாராகி வருவதாக அணியின் மெண்டார் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான டீம் ஜெர்சி வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர்கள், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் கே எல் ராகுல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.