
வெஸ்ட் இண்டீஸ் சென்றிருக்கும் இந்திய அணி தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில் விளையாடுகிறது. இப்போது டாமினிகா தீவுகளில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியை 150 ரன்கள் சுருட்டி ஆல் அவுட் செய்த பிறகு இந்திய அணி களம் இறங்கியது. ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி முதல் நாள் முடிவில் 80 ரன்கள் சேர்த்து விக்கெட் இழப்பின்றி முடித்திருந்தது.
இரண்டாம் ஆண்டு ஆட்டத்தை துவங்கிய இந்த ஜோடி நூறு ரன்கள் கடந்து விளையாடி வந்தது. இருவருமே அரைசதம் அடித்திருந்தனர். அறிமுக போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் பல்வேறு ரெக்கார்டுகளை படைத்திருந்தார் ஜெய்ஸ்வால். தன்னுடைய இந்த அரைசதத்தை சதமாக மாற்றிய ஜெய்ஸ்வால் இதன் மூலமும் சாதனைகள் படைக்க தவறவில்லை.
அறிமுகப் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது இந்திய துவக்க வீரர் என்கிற மிகப்பெரிய சாதனையைப் படைத்தார். மேலும் அறிமுக போட்டியில் அதிக பந்துகளை பிடித்த இந்திய வீரர் என்னும் ரெக்கார்டையும் தன் வசப்படுத்தியுள்ளார். இரண்டாம் நாள் முடிவில் 350 பந்துகளுக்கு 14 பவுண்டரிகள் உட்பட 143 ரன்களைக் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளார். இரட்டை சதம் அடித்து இன்னும் பல சாதனைகளை முறியடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இவர் மீது இருந்து வருகிறது.