-mdl.jpg)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி நேற்று வீழ்த்தியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 356 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்மாக விராட் கோலி 122 ரன்களையும், ராகுல் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதைதொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்ளை இழந்து, 32 ஓவா்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த கேஎல் ராகுல், தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டு சமீபத்தில்தான் குணமடைந்தார். இதனால் அவர் இந்திய அணிக்கு திரும்புவாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தேர்வுகுழுவினர் அவர் மீது நம்பிக்கைவைத்து ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களுக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கியது.