
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் தகுதி பெற்றுள்ளன. டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஜூன் 7ஆம் தேதி லண்டனின் ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த டெஸ்ட் போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைகளுக்கு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் சளைத்தது இல்லை என்பதால், ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இதனால் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட்., கடந்த இரண்டு வருடங்களாகவே நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம் இதனால் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எங்களுடைய ஆட்டம் வெறித்தனமாக இருக்கும் என்று இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.